திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் திடீர் மழையால் சம்பா நெற்பயிர் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திடீரென பெய்த கனமழையால், 3,50,000 மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், மழைநீரில் சாய்ந்து தண்ணீரில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து மழை பெய்துவருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த மழை மேலும் தொடர்ந்தால் வயல்களில் மழை நீர் தேங்கி மகசூல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே