தர்பார் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

நாளை வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தர்பார் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகள் நாளை மற்றும் நாளை மறுநாளும், வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் கூடுதலாக ஒரு காட்சியாக சிறப்புக் காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே