இ-பாஸ் முறையை தமிழக அரசு இன்றே ரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இ-பாஸ் முறையை தமிழக அரசு இன்றே ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் தேவையில்லை என அறிவித்து இருந்தது.

ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மாவட்டங்களுக்குள் செல்லவும் மாநிலத்தில் இருந்து வெளியே செல்லவும் இபாஸ் கட்டாயம் என்று அறிவித்தது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில் இன்று முதல் இபாஸ் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும் இபாஸ் தேவையில்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதே போல் பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இபாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.

எனவே அடுத்து தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே புதுச்சேரியை போல இ-பாஸ் முறையை தமிழக அரசு இன்றே ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவரும் எதிர் கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே