அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் – அதிமுக எம்.எல்.ஏ சவால்..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்று அதிமுக எம்,எல்.ஏ., ஒருவரே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராஜேந்திர பாலாஜி தமிழக பால்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதிமுகவைச் சேர்ந்த சாத்தூர் தொகுதி எம்,எல்.ஏவான ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இது அவ்வப்போது வெளிப்படுவதும் உண்டு.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம் என்று அதிமுக எம்,எல்.ஏ., ராஜவர்மன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், ‘விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்றத் தேர்தலில் தோற்பது நிச்சயம்;

அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது போனில் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே