போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை – தமிழக அரசு உத்தரவு..!!

2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.

இந்நிலையில் 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களின் நிலுவைத்தொகை ₹497.32 கோடி வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 பொடுகினை 2457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகைக்கான காசோலைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் இறையன்பு ,போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் ,மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே