‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்

சென்னை மாகாணம் பெயர் மாற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இதற்கான வரலாற்றைப் பார்க்கலாம்.

1956-ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டன.

அப்போது சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.

ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் இதற்காகவே குரல் கொடுத்தனர்.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.

தமிழ்நாடு தின கொண்டாட்டத்தின் இந்நாளில் தமிழர்களின் வரலாற்றை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த தருணத்தில் முன்வைக்கப்படுகிறது.

மொழிவாரி மாநிலமாக உருவான நாள் தான் நவம்பர் ஒன்று. எனவே, தமிழ்நாடு என பெயர் மாற்றிய அந்த நாளைத்தான் நாம் கொண்டாட வேண்டும் என்ற மாற்றுக் கருத்தும் நிலவுகிறது.

மொழிவாரியாக உருவான மாநிலங்கள் தான் இன்று தேசிய இனங்களின் அடையாளமாக இருக்கிறது. எனவே தமிழ்நாடு நாள் கொண்டாடும் விதத்தில் அரசு விடுமுறை அறிவித்து அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

தமிழ்நாடு நாள் விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைமை செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டு இருந்தது.

மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. 

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

தமிழகத்தில் முதல் முறையாக கொண்டாடப்படும் இத்தகைய விழாவுக்காக தனி நிதியையும் மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

இதையொட்டி தலைமை செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே