நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காக்னிசன்ட் நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அதில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலைகளில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முகநூல் பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுபவர்களில் சுமார் 6 ஆயிரம் பேரையும், ஓரளவு அதிக அனுபவம் உள்ள ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
பேஸ்புக் பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களிலிருந்து காக்னிசன்ட் நிறுவனம் வெளியேறும் நிலையில், வரும் காலங்களில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் ஹம்பிரீஸ் (Brian Humphries) தெரிவித்து இருக்கிறார்.