தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு, கடந்த 17-ம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெற்று பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக தமிழக சட்டப்பேரவை மீண்டும் வரும் மார்ச் 9-ம் தேதி, திங்கள்கிழமை கூட உள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (பிப்.26) அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

அப்போது, துறை ரீதியான பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், பழைய திட்டங்களின் நிலைமை, புதிய திட்டங்களை தொடங்குதல் குறித்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்புவர்.

அதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே