தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா

10 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்திவைத்திருக்கும் படங்களை முடித்துத் தருமாறு நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட தேக்கநிலை, வட்டிப்பெருக்கத்தால் தயாரிப்பாளர்கள் மீது பெருஞ்சுமை விழுந்திருப்பதாகவும்; தடைபட்டிருக்கும் மீதி படப்பிடிப்புகளையும் முடித்தாக வேண்டிய நிலையில் 50 சதவீத நஷ்டம் உறுதியாகியிருப்பதாகவும் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதை உணர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தாங்களாகவே முன்வந்து 30 முதல் 50 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பதாகவும் பாரதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே