கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமன்னா!!

அமெரிக்காவில் சமீபத்தில் கருப்பு இனத்தவர் ஒருவரை கொன்ற சம்பவம் அரங்கேறியது, அந்த சம்பவத்தால் உயிர் இழந்த கருப்பினத்தவருக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் கருப்பு இனத்தவர்களுக்கு ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். எப்படியும் நிகழ்ந்த அநீதிக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்தவகையில் நடிகை தமன்னா கருப்பின மக்களுக்கு தனது ஆதரவு தரும் வகையில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

முகத்தில் கருப்பு மையினைப் பூசிக் கொண்டு, அவர்  பதிவிட்டுள்ளதாவது, “உங்களுடைய மௌனம் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்காது. மனிதன், விலங்குகள் என எந்த ஒரு இயற்கையான உயிரியல் படைப்புகளை அழிப்பது என்பது உயிரியல் சட்டத்திற்கு எதிரானது. சக மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

Related Tags :

Geroge Floyed| Tamanna


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே