கொரோனவால் பாதிக்கப்பட்ட்ட பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…!!!

கொரோனா பாதித்திருந்த, பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் இன்று காலமானார்.

1950-களில் இருந்து 1970-கள் வரை தமிழ்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு வயது 87. பிரபல பின்னணி பாடகர்களுள் ஏ.எல்.ராகவன் ஒருவர். பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல நடிகை எம்.என்.ராஜமை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார்.

காலத்தால் என்றும் அழியாத பல சிறந்த பாடல்களை பாடியிருக்கிறார், ஏ.எல்.ராகவன். எங்கிருந்தாலும் வாழ்க, பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து, உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளர். கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடியிருந்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே