பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுமார் ஒரு ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு அதிகளவில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

தடை விதிப்பதற்கான முன்மொழிதலுக்கு சுவிட்சர்லாந்து அரசே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.

இருந்தாலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த தடை அமலுக்கு வந்தால் சில விலக்குகளும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5.5 சதவிகித மக்கள் தான் இஸ்லாமியர்கள்.

இருந்தாலும் இந்த தடைக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதரவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வீதிகளில் இது தொடர்பான பதாகைகளும் பறக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே