அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

பிறப்பும் , இறப்பும்  அவரவர் கையில் இல்லை என்றாலும், நாம் வாழும் வாழ்க்கை முறை நம்முடைய கையிலே உள்ளது.

அதற்கேற்ப அறிவியல் கூற்றுப்படி, ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் நீண்ட நாள் வாழ்வதற்கு உறுதுணையாக அமையும்.

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது என்பது நாம் அனைவரும் அறிந்த பொதுவான விஷயங்களாகும்.

இந்த பட்டியலை தவிர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அடிக்கடி உடலுறவு கொள்வது என்பது சிறந்த வழிமுறையாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ளும் போது மனஅழுத்தம் குறைகிறது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

அதுமட்டுமின்றி, முதுமையில் நோய் வருவதை தடுக்கிறது, நீண்ட ஆயுளைக் தருகிறது. மேலும், இதயத்தை  வலுப்படுத்தும்.

இன்றைய நவீன கால கட்டத்தில் இதய நோய்க்கு உலகில் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். இவை மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இது பற்றி  இங்கிலாந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின் படி, ஒரு மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு வைத்து கொள்ளும் நபர்களை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு  வைத்து கொள்ளும்  நபர்களுக்கு மாரடைப்பு வருவது குறைவாக உள்ளது.

இந்த ஆய்வானது, 65 வயதிற்குட்பட்ட 1,120 ஆண்கள் மற்றும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதாவது மாரடைப்பினால் பலியானவர்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்பவர்களில் 27 சதவீதத்திற்கும் குறைவாகவும், ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உடலுறவு வைத்து கொண்டவர்களில் 37 சதவீதத்திற்கு அதிகமாகவும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களில்  எட்டு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள் இருந்தன.

எனவே அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்கள் நீண்ட ஆயுளோடு இளமையாகவும் வாழ்கின்றனராம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில்,

பாலியல் செயல்பாடுகளின் குறைந்த  ஈடுபாடு கொண்ட ஆண்களுக்கு, இருதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் பரிந்துரைத்தது.

இவை மட்டுமின்றி, அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு, அந்த நாள் குதூகலமாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இது உடனே மன அழுத்தத்தை போக்கி நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறதாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே