இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு – விவரங்கள் வெளியீடு

இந்தியர்கள் உட்பட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சுவிட்சர்லந்து வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடுவோம் என 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்குகளை வெளியிட வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது.

தாமாக முன் வந்து தகவல் தெரிவிக்கும் விதிகளின்படி இந்தியர்களின் கணக்கு விவரங்களை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

முதற்கட்டமாக இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களின் 31 லட்சம் வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் பலரது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் கடந்த ஆண்டிலேயே எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ரகசியம் காக்கப்படுவதால் யாருடையது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே