தமிழகத்தில் இன்று (அக்.22) 3077 பேருக்கு கொரோனா..; 45 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,077 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 3,077 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 45 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 4,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று மேலும் 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,93,299 ஆக உயர்ந்துள்ளது.

துவக்கத்தை விட கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டிற்குள் வருகிறது.

இதில், ஆறுதல் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே