கொரோனா வைரஸால் இந்தியாவில் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44 பேர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஸ்விகி, சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு, சில நிபந்தனைகளோடு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஸ்விகி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் காலை 7-9:30, மதியம் 12- பிற்பகல் 2:30, இரவு 7-9 ஆகிய நேரம் மட்டும் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசாரிடம் அனுமதி பெறுவதற்கு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஊழியர்களை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன.