ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்தநாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான்.
தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவர்.
நடிப்பிலும், அறச்செயலிலும் தனித்திருக்கும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகின்ற ஜூலை 23 அன்று ரசிகர்கள் மிகச்சிறப்பாக கொண்டாட இருக்கிறார்கள்.
அவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர்.
அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.
சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
இந்திய நடிகர் ஒருவரின் பிறந்தநாள் போஸ்டர் 70 லட்சம் பகிரப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.