கொள்கை குறித்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள் – நடிகை டாப்ஸி ட்வீட்..!!

மற்றவர்களுக்கு நீங்கள் ‘பிரச்சார ஆசிரியராக’ மாறக்கூடாது! விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை டாப்ஸி டிவிட் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 72வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. பல நாடுகளின் பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை டாப்ஸி பன்னு, விவசாயிகளின் போராட்டம் குறித்து பரபரப்பு டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அவரது டிவிட்டில்,

ஒரு டிவீட் உங்கள் ஒற்றுமையைத் தூண்டினால்,

ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையைத் தூண்டுகிறது அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தைத் தூண்டுகிறது

உங்கள் மதிப்பு முறையை வலுப்படுத்துவதில் பணியாற்ற வேண்டியது நீங்கள்தான்,

மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியராக’ மாறக்கூடாது.

என தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே