நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்குத் தூக்கு எப்போது..?

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக் கோரி, அவரது தாயார் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

நிர்பயா வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு எதிராக மாறி, மாறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக்கோரி, டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது.

இது தொடர்பாக நிர்பயா தாயார் கூறிய போது,

  • கடந்த 7 ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறேம்.
  • நிர்பயா குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதில் தற்போது நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன்.
  • இந்த வழக்கு விசாரணையின் போது, தண்டனையை தாமதப்படுத்தும் குற்றவாளிகளின் உத்தியை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே