மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அவரது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை பாஜக அரசு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியதை அடுத்து கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்றும் இதனால் முதல்வர் கமல்நாத் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை முதலமைச்சர் கமல்நாத், தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே