மத்திய சுகாதாரத் துறையின் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்??

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

இதுவரை 175 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த அறிவிப்புகள் :

  • வருகிற 22-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த விமானமும் இந்தியாவில் தரையிறங்க அனுமதி இல்லை. 
  • ஏற்கனவே கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • பொது பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மருத்துவ வல்லுநர்கள் தவிர 65 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கு அரசாங்கங்கள் தகுந்த வழிமுறைகளை வெளியிடும்.
  • மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது.
  • 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்;
  • 65 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.
  • கொரோனா வைரஸ் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மீது விரைவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
  • மேலும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களைத் தவிர தனியார் துறை ஊழியர்களுக்கான வீட்டிற்கான வேலையைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே