சுஜித் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் : திருமாவளவன்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், கடந்த 10 ஆண்டுகளில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து உள்ளதாக கூறினார்.

சுஜித் உயிரை காப்பாற்ற போராடிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல் அதிகாரிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என்றும் கூறினார்.

சுஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே