கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே இன்று ஸ்தம்பித்து போய் இருக்கிறது.
இந்தியாவில் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிக்கிறது.
நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு மனதுடன் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள்.
திரைத்துறையினர் படப்பிடிப்புகளை எல்லாம் நிறுத்திவிட்டு வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
வெளிநாட்டு படப்பிடிப்புகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு தயாகம் திரும்பிய பிரபாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை சுஹாசினி – மணிரத்னம் தம்பதியின் மகன் நந்தனும் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக சுஹாசினி வெளியிட்டுள்ள வீடியோவில், கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்தபடி தனது மகனுடன் பேசுசிறார்.
லண்டனின் இருந்து சென்னை திரும்பிய சுஹாசினியின் மகன், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு அறையிலேயே முடங்கி இருக்கிறார்.
இது தனக்கு போரடித்தாலும், மிக அவசியமான விஷயம் என்பதால் தான் இதை மனதார செய்வதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.