புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கரோனா வைரஸுக்கு தற்போது வரை 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்னெவே புதுவையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.