திடீரென மைதானத்தில் மணலை சுருட்டி வாரி சுழன்றடித்த காற்று

திடீரென சுழட்டி சுழட்டி வீசிய சுழல் காற்றை பார்த்து ஊட்டி மக்கள் தலைதெறிக்க ஓடினர். வானுயரத்துக்கு செம்மண் கலரில் மண் திரண்டு நின்றதை பார்த்து மிரண்டுவிட்டனர்.

தற்போது வானநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.. ஒரு பக்கம் சூறாவளி வீசுகிறது.. இன்னொரு பக்கம் கொளுத்தும் வெயில் சுட்டெரிக்கிறது..

இதுபோக அடுத்து வரும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் மழை, காற்று, வெப்பம் என்று தினந்தோறும் தகவல்களும் அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.. அந்த வகையில், ஊட்டியில் திடீரென சுழல் காற்று வீச ஆரம்பித்து.

ஊட்டி அருகே வேல்கவட்டி என்ற இடத்தில் நேற்று காலை இந்த திடீர் பேய் காற்று வீசியது.. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் தெறித்து ஓடினர்..

மைதானம் ஒன்றில் புட்பால் விளையாடி கொண்டிருந்த பிள்ளைகள் இதை பார்த்து பயந்துவிட்டனர்.. ஒருசிலர் இதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.

அந்த மைதானம் ஏற்கனவே செம்மண் கலரில் இருக்கவும், சுழன்றடித்த காற்றால் வானளவுக்கு அது திரண்டு ரெட் கலரில் உருவாகியது.

சற்று நேரத்துக்கெல்லாம் மேகத்துக்கும் தரைக்குமாக அது சுழன்றபடியே உஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் பிரமாண்டமாக உயர்ந்து நின்றது.

கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கு இந்த சுழல் காற்று நீடித்ததாக தெரிகிறது. வெளிநாடுகளில் இப்படி சுழல் காற்று வீசினால் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார், ஜீப்புகள் கூட சில சமயம் தூக்கி எறியப்பட்டுவிடுமாம்.

இந்த மாதிரியான சுழல் காற்று ரொம்பவும் அரிதான நிகழ்வு என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே