கௌதம்மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’!

நடிகர் சிம்பு, த்ரிஷா நடித்துள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. சிம்பு, த்ரிஷா இருவரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

2010ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வெளியான இந்தப் படம் இன்றளவும் பெரும்பான்மையானவர்கள் கொண்டாடும் படமாக இது திகழ்கிறது.

குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்களை இப்போதும் காதலர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிக முக்கியமான படமாக இது அமைந்தது.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால், படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதன் 2ம் பாகம் போன்று ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் இதில் நடித்துள்ளனர்.

ஊரடங்கு காலம் என்பதால், வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் சொல்வதைக் கேட்டு இருவரும் நடித்துள்ளனர்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கும் பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.

இக்குறும்படம் கார்த்திக் 10 வருடங்களுக்கு பிறகு ஜெஸ்ஸி-யிடம் பேசுவது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் – ஜெஸ்ஸியின் உரையாடல்.. கௌதம் மேனனுக்கே உரிய வசனங்கள், ஏ.ஆர் ரஹ்மானின் பிண்ணனி இசை என ரசிகர்களை மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கே அழைத்து சென்றுள்ளது கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்.

விண்ணைத் தாண்டி வருவாயா – 2 படமாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் சரியாக அமையாததால், உருவாகாமல் உள்ளது.

இந்நிலையில், இந்தக் கதையின் சிறு பகுதியை எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.

இந்தக் குறும்படத்தை Youtubeல் இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே