சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது என்று சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில்,

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனவை தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியால் 56% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பரிசோதனைகளை அதிகரிக்கும்போது தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே கரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்தவர்கள் தமிழகத்தில்தான். அரசின் வழிகாட்டுதல்களை சென்னை மக்கள் பின்பற்றவில்லை.

அரசின் வழிகாட்டுதலை சென்னை மக்கள் பின்பற்றி இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

சென்னையில் 526 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றியதால் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜூன் மாதமும் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னைதான் அரசுக்கு சவாலாக உள்ளது. ராயபுரத்திலுள்ள 134 தெருக்களில் நோய் பரவல் அதிகமாக இருப்பதற்கு மக்கள் நெருக்கமாக இருப்பதே காரணம்.

சென்னைக்குள் வருவோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே