அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நான்காவது கட்டப் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டார். இதில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கட்சி தேமுதிக, ஒவைசி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

ஆரம்பத்தில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் இணையாத நிலையில் தனித்து நின்ற அமமுக, தேர்தல் நெருங்க நெருங்க பலமான கூட்டணியுடன் மூன்றாவது அணியாக பலம் பெற்றுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக இரண்டையும் ஒருசேரத் தோற்கடித்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்ற டிடிவி தினகரன்

இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடுவார், அல்லது இரண்டு தொகுதிகளில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவில்பட்டியில் அவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்.கே.நகர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

‘அமமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக நான்காம் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

1. ஆர்கே நகர் – காளிதாஸ்

2. அரக்கோணம் (தனி) – மணிவண்ணன்

3. ராணிப்பேட்டை – வீரமணி

4. ஆற்காடு – என்.ஜனார்த்தனன்

5. கீழ்பெண்ணாத்தூர் – பி.கே.எஸ்.கார்த்திகேயன்

6. அம்பாசமுத்திரம் – ராணி ரஞ்சிதம்

7. நாங்குநேரி – பரமசிவ ஐயப்பன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே