கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் ஏராளமான முன்னெச்சரிக்கை விஷயமாக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே