தமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்

பணிநேரக் குறைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டது.

இதனிடையே பணிநேரக் குறைப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே