ஓட்டுநரின் உடலில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த ஒட்டுநர் மீது தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கம் வழியாக சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி ஓட்டுநர், சாலை ஓரமாய் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று டீசல் நிரப்புவதற்காகச் சென்றார்.

பங்கில் ஊழியர் டீசல் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஓட்டுநர், அவரிடம் இருந்து டீசல் கண்ணை வாங்கிப் பார்த்தார்.

அப்போது திடீரென்று டீசல் டேங்கில் இருந்து தீ வெளியேறி ஓட்டுநரின் உடலில் பற்றிக் கொண்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது 30 சதவீதம் உடலில் தீக்காயங்களுடன் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீக்காயம் அடைந்தவர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சிங் என்ற தகவல்கள் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே