சிசிடிவி இருப்பதை பார்த்து தலையில் அடித்து கொண்டு தப்பிய கொள்ளையன்

சென்னை சிட்லபாக்கம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த நபர், வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதைக் கண்டவுடன் தலையிலடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

ஜெயா நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொள்ளை அடிக்க முயன்றார்.

வீட்டின் வெளிக்கதவை லாவகமாக திறந்த அவர், உள்கதைவை திறப்பதற்காக அங்குள்ள ஜன்னலில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்தார்.

அப்போது வீட்டின் முன் சிசிடிவி கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மாட்டிக்கொண்டோம் என்ற அச்சத்தில் தலையிலடித்துக் கொண்ட அவர், எதையும் கொள்ளை அடிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே