வேலைவாய்ப்பு இணையதளத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் (அக்.23) பதிவு செய்யலாம்..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 6ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்று வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நாளைமுதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

இதனால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுப்பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் என அனைவரும் இதை பின்பற்றலாம்.

இதுகுறித்து வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்பேசி எண்கள் கட்டாயம் என்றும்; மாணவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவை முகவரி அடையாள அட்டைகளில் ஒன்றாக கருதப்படுவதால் இவற்றில் இன்று கட்டாயம் தேவை என்றும் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே