குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் வீடுகளில் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிரான வாசகங்களை கொண்ட கோலத்தை வரைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அடையாறு சாஸ்திரி நகர் காவல் துறையினர் கோலத்தை வரைவதற்கு அனுமதி மறுத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் சமூக கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.