புதுச்சேரி முதல்வர் கண்ணியம் தவறிப் பேசுவதாக கிரண்பேடி விமர்சனம்

கண்ணியத்தை இழந்து சமீபகாலமாக பேசி வருகிறார்கள் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஆளுநரான தம்மையும், ஆளுநர் மாளிகையையும் கடந்த சில தினங்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தரக்குறைவாக பேசி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது குற்றம் சாட்டுபவரை தான் சாரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும்; கண்ணியத்தை இழந்து தாங்கள் பேசுவதை மக்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு ஆளுநராக புதுச்சேரிக்கும், புதுச்சேரி மக்களுக்குள் இருக்கும் தேவையை பூர்த்தி செய்வதில் தான் தமது முழு கவனமும் உள்ளது என்றும் கிரண்பேடி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே