ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் மாணவி தீக்குளித்து தற்கொலை…

ஆன்லைன் கிளாஸில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்துவிட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது… ஓரளவு தளர்வுகள் ஆங்காங்கே மாநிலங்களில் அமல்படுத்தி வந்தாலும், இன்னும் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை.. கொரோனாவைரசும் முற்றிலுமாக ஒழியவில்லை.

அதனால் எப்படியும் ஸ்கூல் திறக்க இன்னும் சில மாதங்கள் என்று சொல்கிறார்கள்.. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்ரகள்..

எல்கேஜி பிள்ளைகளுக்குகூட ஆன்லைன் கிளாஸ்கள் நடத்தப்படுகிறது.. மாணவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கவே இப்படி ஆன்லைன் வகுப்புகள் என்ற திட்டத்தைகொண்டு வந்ததாக ஒரு சாரார் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.. அந்த மாணவி 10-ம் வகுப்பு படிக்கிறார்.. இவருக்கும் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்பட்டு வருகிறது..

குறிப்பிட்ட சேனலிலும் இந்த பிரத்யேக வகுப்புகள் எடுக்கப்படுகிறது.. இந்நிலையில் இந்த மாணவியிடம் ஸ்மார்ட் போன் இல்லையாம்.. டிவியும் வீட்டில் ரிப்பேர் ஆகிவிட்டதால், அந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி, உடம்பில் மணணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார்.

மகள் நெருப்பில் எரிந்து துடிப்பதை பார்த்து பதறியடித்து கொண்டு பெற்றோர், அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த மாணவி படிப்பில் படு கெட்டிக்காரி என்கிறார்கள்! இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள மாநில கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த மாணவியின் தற்கொலையை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.. எத்தனையோ கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர்..

இவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில், எல்லார் வீடுகளிலும் ஸ்மார்ட் போன் இருக்குமா? படிக்கிற பிள்ளைகள் கையில் அவைகளை வாங்கி தர பெற்றோரால் முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஸ்மார்ட் போன் இருந்தால்தான் ஆன்லைன் கிளாஸில் பங்கெடுக்க முடியும்.. அப்படி இருக்கும்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு இந்த கிளாஸ்களில் பலனும் இருக்காது..

அதுமட்டுமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுவிடுகிறது.. சின்ன வயசு பிள்ளைகளால் மற்ற சக நண்பர்களிடம் அவமானமடைவதாக கருதி கொள்கின்றனர்..

அதனால், இந்த ஆன்லைன் கிளாஸ் உட்பட மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே