ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல்.. மேலும் ஒரு மாணவி சோகமுடிவு..!

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மற்றும் கல்வி சேனல்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்பில் படிக்கும் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அருமந்தையில் ஆன்லைன் வகுப்பு பாடம் புரியததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று மாலை மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு, மீட்கப்பட்ட மாணவி தர்ஷினி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே