வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ள நிலையில், துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில், நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே