பழனி துப்பாக்கிச் சூடு : காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலப் பிரச்சனை காரணமாக தொழிலதிபர் நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை நேற்று சுட்டார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருந்து சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததையடுத்து பழனி நகர போலீசார் நடராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தை கூறி நடராஜன் சரண் அடைந்து,  துப்பாக்கியையும் ஒப்படைத்தார். நடராஜனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே