தமிழக கலாச்சாரத்தை உலகளவில் இசை மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை – ஏ.ஆர்.ரகுமான்

போர், போராட்டம் போன்றவை தகித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கலைஞர்கள் அழகான படைப்புகளை படைக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.  

இரு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று தனது 53வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதையொட்டி சென்னை கும்மிடிப்பூண்டி ஒய்எம் ஸ்டுடியோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் The Futures என்னும் புதிய இசை முயற்சியை தொடங்கினார். 

தமிழக கிராமபுரத்தில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று அப்போது அவர் கூறினார். பின்னர் பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான், மாணவர்கள் எதிர்மறையான சிந்தனைகளில் சிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் அடையலாம் என்றார். 

செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, எல்லா புகழும் இறைவனுக்கே என பதிலளித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே