#INDIAN2 படப்பிடிப்பு விபத்து : கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ராட்சச கிரேன் விழுந்து மூன்று பேர் பலியானவர்களில் ஒருவர் பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார்.

சென்னையில் பிரதான படபிடிப்பு தாளமாக பூவிருந்தல்லியை அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி இருந்து வருகிறது.

மிக பெரிய வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் முதல் பிக் பாஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகள் வரை இங்கு தான் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

நடிகர் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த 14 நாட்களாக படபிடிப்பு நடைபெற்று வருகிறது.

இரவு பகலாக பல்வேறு காட்சிகள் இங்கு தான் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார்.

நேற்று இரவு இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகளுக்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியில் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்தனர். 

இரவு நேரத்தில் ஷூட்டிங் என்பதால் அதிக வெளிச்சம் தேவைப்படும் என்று பெரிய ராட்சச கிரேன்களில் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

சண்டைக்காட்சிகள் படமாக்க நடைபெற்ற பணியின் போது சுமார் 9 மணியளவில் திடீரென மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சச கிரேன் சாய்ந்து விழுந்தது.

இந்த விபத்தின் போது தரையில் வேலை செய்துகொண்டிருந்த மது, இந்திரன் மற்றும் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

வாசு, ராம்குமார், உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முதல் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தின் போது நடிகர் கமல், இயக்குனர் சங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் இருந்துள்ளனர்.

இடைவேளை நேரம் என்பதால் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்த நடிகர் கமல் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். பிறகு நேற்று இரவு தன்னுடைய மன வருத்தத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று இரவு திடீரென ராட்சத கிரேன்கள் சரிந்து விழுந்ததன் காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா பிரபல பிரபல கார்டூனிஸ்ட் மதனின் இளைய மகள் அமிதாவின் கணவர் என்பது குறிப்பிடதக்கது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் பல்வேறு விளம்பரங்களும், கார்பரேட் படங்களும் இயக்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே