#BREAKING : வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது – மகன் SPB சரண்

பாடகர் எஸ்.பி.பிக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமடைந்தது.

இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டாா்.

செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் பயனாக எஸ்.பி.பி.யின் உடல்நிலை சற்று சீரடைந்ததாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் கூறப்பட்டது.

View this post on Instagram

#spb health update 18/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

ஆனால் அவா் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று தெரிவித்தது. அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தகவல் தெரிவித்ததாவது:

நேற்றைய நிலையே இன்றும் தொடர்கிறது. செயற்கை சுவாசம் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படவில்லை என்கிற வதந்தி பரவியுள்ளது. அது உண்மையல்ல.

அது விரைவில் நடக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.

அவருக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கும் அவருக்கும் உதவுகின்றன. எனவே தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே