Breaking: கொரோனா பேரிடர் நிவாரணமாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5000 உதவி: முதல்வர்!

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தார். கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூபாய் 103 கோடியில் 500 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், ” தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியுலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன.

14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளன.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே