தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ 23) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே