புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1600 பேருடன் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு இரயில் புறப்பட்டது!

மதுரையில் 3 ஆம் கட்டமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து 600 பேருடன் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு இரயில் புறப்பட்டுச் சென்றது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் பணியாற்றி வந்த வெளி மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா எதிரொலியாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவித்தனர்.

இதையடுத்து அவர்களது விருப்பத்தின்பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதுவரை மதுரையிலிருந்து 18 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்க்கும் 1600 பேரும், 21 ஆம் தேதி பீகார் மாநிலத்துக்கும் 1600 பேரும் என 2 சிறப்பு இரயில் இயக்கப்பட்ட நிலையில் 3 ஆம் கட்டமாக இரவு 9 மணிக்கு மதுரை இரயில் நிலையத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு இரயிலில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1600 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

முன்னதாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உணவு, தண்ணீர் ஆகியவை மதுரை மாவட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது.

இன்று 4 ஆம் கட்டமாக பீகாருக்கு 1600 நபர்களுடன் சிறப்பு இரயில் இயக்கப்பட்ட உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே