கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி அவசியம் – சென்னை மாநகராட்சி தகவல்..!!

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1000-ஐ நெருங்கும் வகையில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 395 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் கரோனா பாதிப்பு இருப்பதால், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே