தமிழகத்தில் இரண்டாம் நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்..!!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி, 2ம் நாளாக இன்று நடைபெறுகிறது.

உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவை, நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நாடு முழுவதும் 3,000 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 166 மையங்கள் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம், நேற்று ஒரே நாளில் 16,600 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.

அதோடு, முன்களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தடுப்பூசி செலுத்தும் முதல் நாளான நேற்று, பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்தும் பணி எல்லா மாநிலங்களிலும் தாமதமானது. 

முன்களப்பணியாளர்கள் முன்வராதது, கோவின் செயலி பாதிப்பு என பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் நேற்று 2,945 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமும் திட்டமிட்ட இலக்கை அடைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று 2ம் நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியிருக்கிறது.

பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே