சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரம் (09-08-2020)… மண்டலவாரியாக வெளியீடு..!!

சென்னையில் கொரோனா தொற்றால் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்று மட்டும் 986 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,290 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,100 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,734 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மண்டலவாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு:

திரு.வி.க நகரில் 765,
ராயபுரம் 809,
கோடம்பாக்கம் 1354,
தேனாம்பேட்டை 827,
அண்ணா நகர் 1281,
தண்டையார் பேட்டை -619,
வளசரவாக்கம்- 824,
அம்பத்தூர் – 1510,
அடையாறு- 980,
திருவொற்றியூர்- 380,
ஆலந்தூர் – 521,
பெருங்குடி – 545,
மாதவரம் – 447,
சோழிங்கநல்லூர் – 467,
மணலி – 85.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே