குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம்..! – இஸ்ரோ சிவன்

தமிழகத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும், 2020-ம் ஆண்டு இஸ்ரோ செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் சிவன் விளக்கினார்.

இதில் சந்திரயான்-3 விண்கலம் இந்தாண்டில் ஏவப்படும் என்றார். 

ககன்யான் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய சிவன், இதில் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப, 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும், இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டார்.

இதற்காக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார். 

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் புத்தாண்டு நாளில் இந்த புதிய அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே