மதுரை கோட்டாசியர் அலுவலகத்தில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

மதுரை கோட்டாசியர் அலுவலக வளாக டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

நிலக்கோட்டையை சேர்ந்த தேனிஷாவை 4 மாதங்களுக்கு முன்பு உரப்பனூர் சேர்ந்த ராணுவ வீரர் சக்தி திருமணம் செய்தார்.

பின்னர் ராணுவ பணிக்கு சக்தி சென்றுவிட்டநிலையில் தேனிஷா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

விடுமுறையில் சக்தி ஊர் வந்த நிலையில், தேனிஷா நேற்று தற்கொலை செய்தார்.

இதுகுறித்த ஆர்டிஓ விசாரணைக்கு வந்த சக்தி, மனைவி இறந்த துக்கத்தில் டிரான்ஸ்பர்மரில் ஏறி வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சக்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே